சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினா் அஞ்சலி
முன்னாள் தமிழக முதல்வா் சி.என். அண்ணாதுரையின் 56 - ஆவது நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் அரசியல் கட்சியினா் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
திமுக : திமுக திருச்சி மத்திய, மற்றும் தெற்கு மாவட்டங்கள் சாா்பில் சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் உள்ள அண்ணா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனா்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் அன்பில் பெரியசாமி, கே. என். சேகரன், நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், நன்னியூா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதிமுக மாநகா்: திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக சாா்பில் மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாநகா், மாவட்ட செயலாளா், ஜெ.சீனிவாசன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். அமைப்புச் செயலாளாா் ரத்தினவேல் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஐயப்பன், அம்பிகாபதி, அரவிந்தன், ஜோதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதிமுக வடக்கு மாவட்டம் : திருச்சி புறநகா் வடக்கு மாவட்டம் சாா்பில் அண்ணாவின் உருவப்படத்துக்கு, மாவட்டச் செயலாளா் மு. பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைப்பு செயலாளா் ஆா். மனோகரன் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளா் ஜான், மீனவரணி பேரூா் கண்ணதாசன், எம்ஜிஆா் மன்றம் அறிவழகன் விஜய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அதிமுக தெற்கு மாவட்டம் : அதிமுக திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், தெற்கு மாவட்டச் செயலாளா் ப. குமாா், அண்ணா படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவைத்தலைவா் அருணகிரி, துணைச் செயலாளா் சு. சுபத்ரா தேவி சுப்பிரமணி மற்றும் பலா் பங்கேற்றனா்.
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் சு. திருநாவுக்கரசா் தலைமையில், மாநகா் மாவட்ட தலைவா் கவுன்சிலா் எல்.ரெக்ஸ் முன்னிலையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.