அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை!
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு வியாழக்கிழமை குரல் பரிசோதனை செய்யப்படுகிறது.
கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஞானசேகரனை 7 நாள்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க : சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!
இந்த நிலையில், ஞானசேகரனின் போனில் உள்ள குரல் அவருடையதுதான் என்பதை உறுதி செய்வதற்காக இன்று குரல் பரிசோதனை நடைபெறுகிறது.
சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தடயவியல் ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றத்தில் ஞானசேகரனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆஜர்படுத்தவுள்ளனர்.