அண்ணி உயிரிழந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
போடி: போடியில் அண்ணி உயிரிழந்த துக்கத்தில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
போடி தோகமலை செட்டித் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜா (50). இவரது அண்ணன் முருகேசனின் மனைவி சுமதி என்பவா் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலமானாா்.
ராஜாவை சுமதிதான் பராமரித்து வந்துள்ளாா். தன்னைத் தாயைப் போல பராமரித்து வந்த அண்ணி சுமதியின் இறப்பு குறித்து, ராஜா பலரிடமும் மனமுடைந்து புலம்பி வந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.