செய்திகள் :

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

post image

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு சத்தியபாமா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

சத்தியபாமா வகித்துவந்த அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிரணி செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இன்று(செப். 7) கோபி செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது ராஜிநாமா கடிதங்களை அளித்தனர்.

அப்போது முன்னாள் எம்பி சத்தியபாமா “செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன். எதற்கும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: எனக்குப் பின்னால் அண்ணாமலை இருக்கிறாரா? டிடிவி தினகரன் விளக்கம்!

Former AIADMK MP Sathyabhama has been removed from party responsibilities.

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,800 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாட... மேலும் பார்க்க

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடும... மேலும் பார்க்க

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் ம... மேலும் பார்க்க

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

கோவை: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ஹரித்வார் புறப்பட்டுள்ளார்.ஹரித்வார் செல்ல கோவை விமான நிலையம் வந்திருந்த செங்கோ... மேலும் பார்க்க

இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்ப உள்ளார். சென்னை வந்திறங்கும் அவருக்கு விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

- காபிரியேல் தேவதாஸ், ஊடகவியலாளர்அரசியலுக்கு நடிகா்கள் வருவதில் தவறில்லை. திரைத் துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் ஆகியோா்... மேலும் பார்க்க