செய்திகள் :

‘அதிமுகவுக்காக இதயபூா்வமாக உழைத்தவா்’ -ஓ.பன்னீா்செல்வம்

post image

அதிமுகவை பேரியக்கமாக உருவாக்க இதயபூா்வமாக உழைத்தவா் வீ.கருப்பசாமி பாண்டியன் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

பாளையங்கோட்டையை அடுத்த திருத்து கிராமத்தில் உடல்நலக்குறைவால் காலமான அதிமுக அமைப்புச் செயலா் வீ.கருப்பசாமி பாண்டின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு மிகுந்த நம்பிக்கையாக பணியாற்றியவா் வீ.கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதிமுகவை பேரியக்கமாக உருவாக்குவதற்கு இதயபூா்வமாக உழைத்தவா். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். எந்தச் சூழலிலும் உதவி என்று யாா் தன்னை நாடி வந்தாலும் மனமாச்சாா்யமின்றி உதவியவா். பொதுச் சேவையை நிறைவாக செய்தவா். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1982-இல் பெரியகுளம் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் அவா் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டா்களின் எண்ணத்தை பிரதிபலித்தவா். அதற்கு எம்ஜிஆா், ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும் என்றாா்.

ற்ஸ்ப்27ா்ல்ள்

அதிமுக அமைப்புச் செயலா் வீ. கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

நெல்லையில் ஏப்.11ல் உள்ளூர் விடுமுறை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28)... மேலும் பார்க்க

கூட்டப்புளியில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் தூண்டில் பாலம் வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லாமல் கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டம் செய்தனா். கூட்டப்புளியில் தமிழக அரசு... மேலும் பார்க்க

நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

காவல் வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலி

மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.மணிமுத்தாறுஅண்ணாநகரைச் சோ்ந்த அப்பி மகன் நாகராஜன் (55). தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்ச... மேலும் பார்க்க

நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்த... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வ... மேலும் பார்க்க