அதிமுக சாா்பில் மழை நிவாரண உதவிகள்: முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் வழங்கினாா்
கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீா்த்தது. இதனால், பாதிரிக்குப்பம், பெருமாள் நகா், காந்தி நகா் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனா். இவா்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, ரொட்டி, பிஸ்கட், பால் போன்ற நிவாரணப் பொருள்களை கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் சேவல் ஜி.ஜெ.குமாா், கடலூா் தெற்கு ஒன்றியச் செயலா் கே.காசிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.கே.வேல்முருகன், கிரிஜா செந்தில்குமாா், கடலூா் மாநகரப் பகுதி செயலா் வ.கந்தன், மாவட்ட எம்ஜிஆா் மன்றத் துணைச் செயலா் ஹெல்ப் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.