'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சாத்தூரில் அதிமுக நிா்வாகிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி, விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 7, 8-ஆம் தேதிகளில் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் சாத்தூரில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டாா். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ராஜவா்மன், எஸ்.ஜி. சுப்பிரமணியன், அம்மா பேரவை இணைச் செயலா் சேதுராமானுஜம், எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்டத் துணைத் தலைவா் ஹரிஹரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதே போல, விருதுநகரில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.