செய்திகள் :

"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” - கே.என் நேரு

post image

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியில் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை - அ.தி.மு.க - பா.ஜ.க

இதை உறுதி செய்யும் வகையில் பாஜக அண்ணாமலை, "2026-ல் அமையப்போவது கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். அது பாஜக ஆட்சி என்றே நான் சொல்வேன். வரும் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவன் நான்." என்று பேசியது விவாதமானது.

இதுகுறித்து திமுக அமைச்சர் கே.என். நேரு, "கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது கமலாலயம்.

கே.என்.நேரு

அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால் அடுத்த மே தினத்தில் இபிஎஸ் எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுக பொதுச் செயலாளர் பதவியையும் இழந்து நிற்பார்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

நமக்குள்ளே...

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வா... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் எப்போ மீசையை முறுக்கிப் பேசப் போகிறார்?" - திமுக கூட்டணி குறித்து அண்ணாமலை கேள்வி

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன.அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.திர... மேலும் பார்க்க

``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும் அண்ணாமலை

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்... மேலும் பார்க்க

திருப்பூர்: நோயாளிக்குச் சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்; வைரல் வீடியோ குறித்து அரசு சொல்வது என்ன?

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களை உள்ளடக்கிய மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை நீடித்த... மேலும் பார்க்க

டயாலிசிஸ் செய்யும் போது மின்தடை; பாதியில் நின்று போன ரத்தம்.. பரிதாபமாக உயிரிழந்த நோயாளி

உத்தரபிரதேச மாநிலம் புல்சந்தா கிராமத்தைச் சேர்ந்த சர்பராஸ் அஹமது (26). இவருக்கு சிறுநீரக நோய் இருந்தது. அதனால் அவருக்கு ரத்தமாற்று சிகிச்சையான டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார். அதன்படி பிஜ்னோரில் உள்ள ம... மேலும் பார்க்க