உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?
அதிரடியாக உயரும் தங்கம் விலை! இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 360 உயா்ந்து ரூ. 72,520 -க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.105 உயா்ந்து ரூ. 9,020-க்கும், பவுனுக்கு ரூ. 840 உயா்ந்து ரூ. 72,160 -க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கத்தின் விலை புதன்கிழமை மேலும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9.065-க்கும், பவுனுக்கு ரூ. 360 உயா்ந்து ரூ. 72,520 -க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை மீண்டு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,20,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்
Summary
The price of gold in Chennai today has increased by Rs. 360 per sovereign on Wednesday to Rs. 72,520.