செய்திகள் :

அதிர்ஷ்டம் குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன?

post image

ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார்.

’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை நேற்றிரவு வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மாவுக்கு 2 கேட்ச்சுகளை குஜராத் அணியினர் தவறவிட்டனர்.

அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு விளையாடிய ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார். அதற்காக, ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

போட்டிக்குப் பிறகு விருது வென்ற ரோஹித் சர்மா பேசியதாவது:

அதிர்ஷடத்தை பயன்படுத்திக் கொண்டேன்

நான் இந்த சீசனில் 4 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளேன். இன்னும் கூடுதல் அரைசதங்களை அடிக்க விரும்புகிறேன். அணியாக எங்களுக்கு நல்ல நாள்.

எலிமினேட்டரில் விளையாடுவதன் முக்கியத்துவம் எனக்குப் புரியும். அணியாக நன்றாக விளையாடியது பெருமையாக இருக்கிறது.

போட்டியில் விளையாடும்போது, எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு அணிக்காக அனைத்தையும் செய்வேன். எனக்கு கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாக பயன்படுத்தி அணியை நல்ல இடத்திற்குக் கொண்டு சென்றேன்.

ஐபிஎல் தொடருக்கு முன்பு அதிர்ஷ்டமில்லை

ஈரப்பதம் வந்தபோது பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருந்தது. எங்களது அணியினர் அதைச் சிறப்பாக கையாண்டார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஐபிஎல் தொடருக்கு முன்பாக நான் அடித்த ஷாட்டுகள் எல்லாமே ஃபீல்டர்களிடம் சென்றன. எப்படி இருந்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் தேவை. அது எனக்கு இந்நாளாக இருந்தது.

அதிரடியான கணத்தை தொடருவதிலேயே நான் கவனம் செலுத்தினேன். ஜானி பெயர்ஸ்டோவை நீண்ட நாள்களாகவே தெரியும். முதல் போட்டியில் ஆடுவதுபோல் விளையாடவில்லை. நல்ல தொடக்கம் கிடைத்தது அதைப் பயன்படுத்திக் கொண்டோம் என்றார்.

நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற கேள்விக்கு, “நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் எல்லாமே தோற்கின்றன. இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்கு ஆதரவு” என சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் ... மேலும் பார்க்க

நரேந்திர மோடி திடலில் குவியும் ஆர்சிபி ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண ஆர்சிபி ரசிகர்கள் நரேந்திர மோடி திடலில் குவிந்து வருகிறார்கள்.அகமதாபாதில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிக்கு தற்போதே ரசிகர்கள் செல்லத் தொடங்கியது கிரிக்கெட் ரசி... மேலும் பார்க்க

சாம்பியன் யார்? ஆர்சிபி vs பஞ்சாப்: ஐபிஎல் செய்திகள் நேரலை...

ஏக்கம் தீருமா?18 ஆண்டுகளாகவே கோப்பை கைக்கு எட்டாத வகையில் இருப்பது, பெரும் ரசிகா் பட்டாளம் கொண்டிருக்கும் பெங்களூரு அணிக்கும், அதன் நட்சத்திர வீரா் விராட் கோலிக்கும் நெருடலாகவே இருந்து வருகிறது. தற்போ... மேலும் பார்க்க

முதல் முறை சாம்பியனாக முனைப்பு! பெங்களூரு - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்துகின்றன.இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகின்றன... மேலும் பார்க்க

வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல்... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டிய... மேலும் பார்க்க