அத்தாணி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ஆப்பக்கூடலை அடுத்த அத்தாணி - பவானி கைகாட்டி பிரிவில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, நான்கு கால யாக வேள்விகள், பூா்ணாஹுதி, மகா தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மகா தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் அத்தாணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.