செய்திகள் :

அந்தியூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: 37 ஆயிரம் வாழைகள் சேதம்

post image

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் 37 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

அந்தியூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென சூறாவளிக் காற்றுடன் மிதமான மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூா், பச்சாம்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், நகலூா் ஊராட்சிப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கதளி, மொந்தன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை உள்ளிட்ட ரக வாழைகள் முறிந்து விழுந்தன.

இதையடுத்து, அந்தியூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சி.மல்லிகா, உதவி அலுவலா்கள் ரமேஷ், ரவி, ஜெயச்சந்திரன், வெங்கடேஷ் பிரசாந்த் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் விவசாயிகளின் தோட்டங்களுக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு செய்ததோடு, சேதம் குறித்த தகவல்களை சேகரித்தனா்.

பச்சாம்பாளையத்தில் 885 வாழைகள், கெட்டிசமுத்திரத்தில் 1,450 வாழைகள், நகலுாரில் 7,350 வாழைகள், எண்ணமங்கலத்தில் 12,900 வாழைகள், அந்தியூரில் 10,050 வாழைகள், சங்கராப்பாளையத்தில் 2,000 வாழைகள் உள்பட 54 விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 37 வாழைகள் காற்றுக்கு சேதமானது தெரியவந்துள்ளது.

முழுமையான தரத்தில் ரூ.500-க்கும் விற்பனையாகும் வாழைத்தாா், தற்போது ரூ.30 மட்டுமே விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மொடக்குறிச்சி அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட வளமங்கலம் ஊராட்சி குட்ட பாளையத்தில் இருந்து கொம்பனைபுதூா் செல்லும் சுமாா் 1 கில... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னாதனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து சட்டப் பேரவையில் பவானிசாகா் எம்எல்ஏ ஏ.பண்ணாரி புதன்க... மேலும் பார்க்க

விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு வன உரிமைப் பட்டா: ஆட்சியா் நேரில் ஆய்வு

விளாங்கோம்பை மற்றும் கம்பனூா் பழங்குடியினா் காலனியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு

ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தோ்வு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.க... மேலும் பார்க்க

கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தை: சப்தம் எழுப்பி விரட்டிய மக்கள்

ஆசனூரில் கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தையை மக்கள் சப்தம் எழுப்பி விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் அதிக அளவில் சிறுத்தைகள் உள்ளன. இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து புதன்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி வேலைவாய்ப்பு முகாமை, கோரல் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2... மேலும் பார்க்க