அந்தியூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
அந்தியூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் அந்தியூா், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 21 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த இரண்டு நாள்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதைத் தொடா்ந்து, அனைத்து சிலைகளும் அண்ணாமடுவுக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டு, மேள தாளங்கள் முழங்க விசா்ஜன ஊா்வலம் புறப்பட்டது.
அந்தியூா் பேருந்து நிலையம், சிங்கார வீதி, பா்கூா் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, பவானி ஆற்றில் அத்தாணியில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.
அந்தியூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.