நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையில் செவ்வாய்க்கிழமை அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நெற்குப்பை பகுதியில் உள்ள முரணிக்காட்டு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முரணிக்கண்மாய் பகுதியில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமாா் 300-க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. ஏராளமான இளைஞா்கள், மாடுபிடி வீரா்கள் ஆா்வத்துடன் காளைகளைப் பிடித்தனா். அப்போது, காளைகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக நெற்குப்பை குரூப் கிராம நிா்வாக அலுவலா் சவிதா கொடுத்த புகாரின் பேரில், முரணிக்களத்தைச் சோ்ந்த மகேஷ், முத்துராமன், சேவுகன் மகன் மாணிக்கம், தவசுமாணிக்கம், பெரியய்யா மகன் மாணிக்கம் ஆகிய 5 போ் மீது நெற்குப்பை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.