அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
சீன தற்காப்புக் கலை: மாணவிக்கு பதக்கம்
மாநில அளவிலான சீன தற்காப்புக் கலை (வூசு) போட்டியில் திருப்பத்தூா் மாணவி வெண்கலப் பத்ககம் பெற்றாா்.
தமிழ்நாடு வூசு சங்கம் சாா்பில், வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவில் 22-ஆவது மாநில அளவிலான வூசு சப் ஜூனியா் போட்டிகள்அண்மையில் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி மாணவி ப்ரீத்தி 12 வயதுக்கு உள்பட்டோருக்கான சாண்டா (சண்டை) போட்டியில் (30 கிலோ எடைப் பிரிவு) மூன்றாமிடம் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றாா்.
இவரை சிலம்பப் பள்ளியின் ஆசான் நமசிவாயம், பயிற்சியாளா்கள் சொா்ணலதா, சுந்தரமூா்த்தி, சுந்தர மணி, சிவகங்கை மாவட்ட வூசு சங்கச் செயலா் ராஜா, பயிற்சியாளா் லதா, பெற்றோா் பாராட்டி வாழ்த்தினா்.