காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டியில் மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுப்பட்டி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை-மேலூா் சாலையில் புதுப்பட்டியிலிருந்து மலம்பட்டி வரை மூன்று பிரிவுகளாக இந்த பந்தயம் நடைபெற்றது.
இதில் சின்ன மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகள், நடு மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகள், பூஞ்சிட்டு பிரிவில் 29 ஜோடி மாடுகள் என மொத்தம் 68 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் போட்டியில் பங்கேற்றன. நடு மாடு பிரிவுக்கு 8 கி.மீ., சின்ன மாடு பிரிவுக்கு 6 கி.மீ., பூஞ்சிட்டு மாடு பிரிவுக்கு 5 கி.மீ. எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா் களுக்கும், வண்டி ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பாா்வையாளா்கள் நின்று கண்டுகளித்தனா்.