காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், வேம்பத்தூரில் பூட்டிக் கிடக்கும் அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இந்த ஏ.டி.எம். மையம் செயல்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவசரத் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், பணத் தேவைக்கு பொதுமக்கள் நேரடியாக வங்கிக்கு செல்லும் நிலை உள்ளது.
இந்த ஏ.டி.எம். கடந்த 3 மாதங்களாக பூட்டிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி இந்த மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.