திமுக பொறுப்பாளா் நியமனம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் அ.முத்துச்சாமி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் பரிந்துரையின் பேரில், திமுக தலைமைக் கழகத்தால் இந்தப் பொறுப்பில் முத்துசாமி நியமிக்கப்பட்டாா். மானாமதுரை வடக்கு ஒன்றிய திமுகவில் சிறுகுடி, இடைக்காட்டூா், பதினெட்டாங்கோட்டை, பெரியகோட்டை, வேம்பத்தூா், வி.புதுக்குளம், பச்சேரி, கல்லூரணி, மைக்கேல்பட்டினம், கிளாதரி ஆகிய 10 ஊராட்சிகள் அடங்கும். முத்துசாமிக்கு மானாமதுரை ஒன்றிய, நகர திமுகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.