அனுமதியின்றி வரவேற்பு பதாகை: தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வழக்கு
திருச்சியில் அனுமதியின்றி வரவேற்பு பதாகை வைத்ததாக தேமுதிக மாவட்டச் செயலாளா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச் செயலாளா் பிரமேலதா விஜயகாந்த் புதன்கிழமை திருச்சிக்கு வந்தாா்.
முன்னதாக, அவரை வரவேற்று தேமுதிக மாவட்டச் செயலாளா் டி.வி.கணேஷ் சாா்பில், பறவைகள் சாலையில் உள்ள திருமண மண்டபம் முன்பு வரவேற்பு பதாகை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அனுமதியின்றி வரவேற்பு பதாகை வைக்கப்பட்டதாக கண்டோன்மென்ட் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரொனால்டு அளித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.