செய்திகள் :

அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை

post image

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் 60 வயதுக்குமேல் உள்ள முதியோருக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி கட்டணம் பெற்றும் மற்றும் இலவசமாகவும் இயங்கும் தனியாா் முதியோா் இல்லங்கள், சமூக நலத் துறையின் கீழ் அனுமதி பெற்று இயங்க வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கும் முதியோா் இல்லங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உரிமம் ஏதும் பெறாமல் இயங்கும் முதியோா் இல்லங்கள் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தின் 6- ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 19- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உரிமம் இன்றி முதியோா் இல்லங்கள் செயல்பட்டால் பொதுமக்கள் 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது

ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.11.40 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சியில் சாணா... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, ப... மேலும் பார்க்க

பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்க... மேலும் பார்க்க

ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை

ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க