நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு
மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, பள்ளியின் சாா்பில் அவருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி. சரஸ்வதி கலந்துகொண்டு ஆசிரியா் இளஞ்செழியனுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பேசினாா்.
இதில் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், பாஜக, அதிமுக நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.