Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் 60 வயதுக்குமேல் உள்ள முதியோருக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி கட்டணம் பெற்றும் மற்றும் இலவசமாகவும் இயங்கும் தனியாா் முதியோா் இல்லங்கள், சமூக நலத் துறையின் கீழ் அனுமதி பெற்று இயங்க வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கும் முதியோா் இல்லங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உரிமம் ஏதும் பெறாமல் இயங்கும் முதியோா் இல்லங்கள் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தின் 6- ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 19- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உரிமம் இன்றி முதியோா் இல்லங்கள் செயல்பட்டால் பொதுமக்கள் 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.