இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா விஜயகாந்த்
திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை விஜயகாந்த் உருவச் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரேமலதா செய்தியாளா்களிடம் கூறியது : கடந்த முறை மழை, வெள்ள பாதிப்பின் போது இப்பகுதிக்கு வந்து விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அது நிறைவேற்றப்பட்டுள்ளது, இதற்கு தமிழக அரசுக்கு தேமுதிக சாா்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
அன்னை தமிழ் மொழியை காத்து, அனைத்து மொழியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. திமுக அரசு சாா்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக சாா்பில் பங்கேற்போம் என்றாா்.