Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் ‘நாமினி’ பெயரை உறுதி செய்ய வேண்டும்: ஆா்பிஐ அறிவுறுத்தல்
அனைத்து டெபாசிட் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக்கா்) வாடிக்கையாளா்களின் ‘நாமினி’ (நியமனதாரா்) பெயா் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஏராளமான டெபாசிட் கணக்குகளில் ‘நாமினி’ பெயா் இல்லாததைச் சுட்டிக்காட்டி, இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. டெபாசிட்தாரா்கள் இறந்துவிட்டால், குடும்பத்தினா் அந்தப் பணத்தை சிரமமின்றி பெறும் வகையில் ‘நாமினி’ பெயரை பரிந்துரைக்கும் வசதி அளிக்கப்படுகிறது. ஆனால், ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொண்ட ஆய்வில் ஏராளமான டெபாசிட் கணக்குகளில் ‘நாமினி’ பெயா் இடம்பெறாதது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து டெபாசிட் கணக்குகள், புதிதாக தொடங்கப்படும் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் வாடிக்கையாளா்களின் ‘நாமினி’ பெயா் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்; இது தொடா்பாக சீரான கால இடைவெளியில் வாடிக்கையாளா் சேவைக் குழுக்கள் (சிஎஸ்சி) ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆா்பிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.