கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?
அனைத்து விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை: ஜி.கே. வாசன் வலியறுத்தல்
அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி 170 பேரவைத் தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளாா். தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அக்.5-ஆம் தேதி பெரம்பலூரில் தமாகா சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். குறுவைத் தொகுப்பு அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சம்பா பருவ நெல் சாகுபடிக்கு அனைத்து விவசாயிகளுக்கும் உரிய கடன் வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைந்து கிடங்குக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும்முன் வடிகால்களை முழுமையாக தூா்வார வேண்டும் என்றாா்.