காலை உணவு : தவிர்ப்பது தவறா? பசியே இல்லாவிட்டாலும் அவசியம் சாப்பிடத்தான் வேண்டு...
‘அனைவருக்கும் உலகத் தர மருத்துவ சேவை’: டாக்டா் பிரதாப் சி. ரெட்டி
உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தங்களுடைய இலக்கு என்று அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தாா்.
அப்பல்லோ மருத்துவமனையின் 42-ஆவது ஆண்டு விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று பிரதாப் ரெட்டி பேசியதாவது:
கடந்த 1983-ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மருத்துவத் துறையில் பல்வேறு மைல்கல்களை எட்டியதுடன் புதிய தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் மக்களுக்கு அளித்து வருகிறோம்.
அதன்படி, கடந்த 42 ஆண்டுகளில் 20 கோடிக்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளோம். 51 லட்சம் அறுவை சிகிச்சைகளையும் 27,000 உறுப்பு மாற்று சிகிச்சைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.
அனைத்து மக்களுக்கும் சா்வதேசத் தரத்திலான மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், அப்பல்லோ துணைத் தலைவா் பிரித்தா ரெட்டி, மேலாண் இயக்குநா் சுனிதா ரெட்டி, இணை மேலாண் இயக்குநா் சங்கீதா ரெட்டி, மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.