`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
அன்னவாசல் அருகே கரும்பு வயல்கள் ஆய்வு
அன்னவாசல் அடுத்துள்ள சென்னப்பநாயக்கன் பட்டியில் விளைவிக்கப்பட்டுள்ள கரும்புத் தோட்டத்துக்கு சனிக்கிழமை அரசு அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கரும்பு கொள்முதல் குழு மூலம் அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும், விவசாயிகளிடமிருந்து நேரடியாக இணையதளம் வாயிலாக அல்லது அந்தந்த கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளா்கள் மூலம் மட்டுமே கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டக் கூட்டுறவு இணை பதிவாளா் அ. ஜீவா, துணை பதிவாளா் க. ராஜவேல் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அன்னவாசலை அடுத்துள்ள சென்னப்பநாயக்கன் பட்டியில் கரும்பு தோட்டத்துக்கு நேரடியாகச் சென்று கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.