செய்திகள் :

அன்னை இல்லம்: `எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்க’ - ராம்குமாருக்கு உத்தரவு

post image

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து..!

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

`எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை'

பிரபு - ராம் குமார்

இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `அன்னை இல்லத்தின் மீது ராம்குமாருக்கு எந்த உரிமையும் அல்லது பங்கும் இல்லை’ எனக்கூறினார்.

இதனையடுத்து, `அன்னை இல்லத்தின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன்’ எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

TASMAC : `ஐகோர்ட்டை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?’ - தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ந்தேதி வரை மத்திய அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

RN Ravi: `10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்!’ - ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்து வருகிறத... மேலும் பார்க்க

`சீமான் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்!' - வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பத... மேலும் பார்க்க

Disclosure of Assets: `769 நீதிபதிகளில் 95 பேரே...'- சொத்து விவர வெளியீடு விவகாரத்தில் நடப்பதென்ன?

சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதும், அதற்குப் பிறகு அவர் அலகாபாத் உயர் நீதிம... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீதிபதி அதிரடி உத்தரவு

அதிமுக ஆட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே அதிர வைத்தது. அதிமுக புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்போதுவரை இந்த வழக்கு அரசியல் ரீதியாக விவாத பொருளாக... மேலும் பார்க்க

தங்களின் சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்! - முழு விவரம்

நீதிபதிகளின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை குறித்து எப்பொழுதும் கேள்வி எழுப்பப்பட்ட வந்திருக்கிறது. குறிப்பாக அவர்களது சொத்து விவரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பிறகு அது குறித்து வ... மேலும் பார்க்க