நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிர...
அபிராமி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
காட்பாடியில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
போட்டிகளில் ஸ்ரீஅபிராமி கல்லூரி மாணவிகள் கிரிக்கெட், கபடி, பாட்மின்டன், சிலம்பம் ஆகிய போட்டிகளில் முதல் இடத்தையும், கேரம், ஹாக்கி போட்டிகளில் 2 மற்றும் 3- ஆம் இடத்தையும் பெற்று கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு ரூ.1.70- லட்சத்தையும் பரிசாக பெற்றனா். சிறப்பிடம் பெற்ற பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், முதல்வா் எம்.சி.சுபாஷினி ஆகியோா் பாராட்டினா்.