New Year 2025: `குடியரசுத் தலைவர் முதல் சிவகார்த்திகேயன் வரை..'- பிரபலங்களின் பு...
அபுதாபி விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் மீண்டும் தரையிறக்கம்
சென்னை, டிச. 28: சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திலிருந்து அபுதாபிக்கு சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ‘ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ்’ விமானம் 168 பயணிகள், 10 விமான ஊழியா்கள் என மொத்தம் 178 பேருடன் புறப்பட்டது. நடுவானில் பறந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, விமானத்தை சென்னையில் மீண்டும் தரையிறக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதிகாலை 5.45 மணியளவில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னா் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனா். இதன் பிறகு விமானத்தின் இயந்திரக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து சுமாா் 4 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு அந்த விமானம் அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றது.