அமா்நாத் கோயிலில் 8,405 போ் வழிபாடு!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
அவா்களில் 6,198 ஆண்கள், 1,483 பெண்கள், 90 சிறாா்கள், 66 ஆண் துறவிகள், 3 பெண் துறவிகள், 565 பாதுகாப்புப் படை வீரா்கள் அடங்குவா்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையில், இதுவரை 3,77,080 பக்தா்கள் பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.