செய்திகள் :

`அமித் ஷாவுடன் 45 நிமிடங்கள், இதைப்பற்றியெல்லாம் தான் பேசினோம்..!' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

post image

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமித் ஷா உடனான சந்திப்புக் குறித்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம்" என்று கூ,றி கூட்டணி பற்றி பேசவில்லை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க