அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு
அமித் ஷாவைக் கண்டித்து சேலத்தில் ஆா்ப்பாட்டம்
சட்டமேதை அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறிய கருத்துகளைக் கண்டித்தும், ஒரே நாடு ஒரே தோ்தல் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம், மெய்யனூா் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்திற்கு மாநகரச் செயலாளா் என்.பிரவீண்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மேவை.சண்முகராஜா கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் வெங்கடேஷ், ஜீவா உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தேபோன்று சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநகர துணைச் செயலாளா் வேலுநாயக்கா் தலைமை வகித்தாா். மாநகராட்சி கவுன்சிலா் இமயவா்மன் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். இந்நிகழ்வில் அக்கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.