செய்திகள் :

அமெரிக்காவில் டிக் டாக் சேவை மீண்டும் தொடக்கம்!

post image

அமெரிக்காவில் டிக் டாக் சேவை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சீன நிறுவனமான டிக் டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் சீனாவுக்கு பகிரப்படுவதாகக் கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை உத்தரவானது, ஜன. 19 முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் 170 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் டிக் டாக் செயலியை அமெரிக்காவுக்கு விற்றால் மட்டுமே இந்தத் தடை நீக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இதையும் படிக்க | டிரம்ப் பதவியேற்பு பிரம்மாண்டம்! ருசிகர தகவல்கள்

டிக் டாக் சேவைக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதனை அமல்படுத்த 3 மாத கால அவகாசம் அளிக்க டிரம்ப் தீர்மானித்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

”எங்கள் சேவை வழங்குநர்களுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, டிக் டாக் சேவையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். டிக் டாக் செயலியின் சேவையைத் தொடர உதவிய அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் சேவையை அனுமதித்த அதிபர் டிரம்ப்புடன் நீண்டகால நோக்கில் இணைந்து பணியாற்றுவோம்” என டிக் டாக் செயலியின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உத்தரவின்படி, டிக் டாக் செயலி மீதான தடையைத் தவிர்க்க, அதன் சீன தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ ஜனவரி 19 ஆம் தேதிக்குள் செயலியை அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டிரம்ப்பின் இந்த நடவடிக்கை டிக் டாக் பயனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹைதராபாத் நகரின் ஆர்கே புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி தேஜா (26). இவர் தனது மேல் படிப்புக்காக கடந்... மேலும் பார்க்க

நாளை சூரியன் மறைவதற்குள் எல்லை ஊடுருவல் நிறுத்தப்படும்! டிரம்ப் சூளுரை

நாளை சூரியன் மறைவதற்குள் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் படைகள் பிடித்துவைத்திருந்த பிணைக் கைதிகள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக ... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் விருந்து: நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ்!

அமெரிக்க அதிபரா பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் பலரது கவனத்தையும் ஈர்த... மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்பு பிரம்மாண்டம்! ருசிகர தகவல்கள்

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜனவரி 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸுடன் தனது இரண்டாவது அலுவல்பூர்வ பதவிக்காலத்தை இன்றைய நாளில் த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டம்

சிங்கப்பூரில் இந்திய தூதரகம் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளா்கள் பங்கேற்றனா். தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த செவ... மேலும் பார்க்க