செய்திகள் :

அமெரிக்கா: நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

post image

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்தவர்கள் எடுத்த விடியோ பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்களில் ஒன்றான நியூ மெக்சிகோவுக்குட்பட்ட லாஸ் குரூசெஸ் பகுதியிலுள்ள பூங்காவில் இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் 19 வயது இளைஞர்கள் இருவரும், 16 வயது சிறுவன் ஒருவரும் பலியானதாக நியூ மெக்சிகோ காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் 16 முதல் 36 வயதுடைய 14 பேர் படுகாயம் அடைந்து நகரில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பூங்காவில் இருந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டின்போது எடுத்த விடியோ பதிவுகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் காவல் துறை சுட்டிக்காட்டியது.

லாஸ் குரூசெஸ் நகரின் கவுன்சிலரும் மேயருமான ஜோஹன்னா பென்கோமோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது,

நமது நகரத்தில் இதுபோன்று நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது நடந்துள்ள சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நமது நகரத்தில் நடப்பது கனவு போன்று உள்ளது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய பிராத்த்தனை செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த வருத்ததங்கள் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலியாகியுள்ளனர். மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவி... மேலும் பார்க்க

அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

அமேசான் நிறுவனரும் உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்ததாவது, ஜெப் பெசோஸுக்கும்... மேலும் பார்க்க

மன்னராட்சியா? குடியரசு ஆட்சியா? நேபாளத்தில் மீண்டும் போராட்டம்!

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.நேபாளத்தில் மன்னராட்சி ஆதராவளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்... மேலும் பார்க்க

பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்... 43 பேரின் கதி என்ன?

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியிருந்த 43 பேரை மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர். மியான்மரில் இன்று... மேலும் பார்க்க

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நாடுகள்: தாய்லாந்தில் விமான சேவை நிறுத்தம்!

தாய்லாந்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மியன்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று பிற்பகலில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால... மேலும் பார்க்க

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்: பிரதமர் மோடி கவலை!

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். நிலநடுக்கப்ப பகுதியில் அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காக வேண்டுகிறேன். மேலும் நிலநடுக்க... மேலும் பார்க்க