செய்திகள் :

அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு: எலான் மஸ்க்

post image

எலான் மஸ்க் தலைமையின்கீழான, அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் (DOGE) தலைமைக்கு தொழிலதிபா் எலான் மஸ்க்கையும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

இந்தத் துறையின் வேலைவாய்ப்புகளை, துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அறிவிப்பில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, ``எங்களுக்கு அதிகளவிலான பகுதிநேர யோசனையாளர்கள் தேவையில்லை. செலவுக் குறைப்பு வேலைக்கு வாரத்தில் 80 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்ய விரும்புபவர்கள்தான் தேவை. உங்களிடம் அந்த தகுதி இருந்தால், விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பிக்கும் முதல் ஒரு சதவிகித விண்ணப்பங்களை எலான் மஸ்க்கும், விவேக் ராமசாமியும் நேரடியாக மதிப்பாய்வு செய்யவுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசுத் துறைகள் மேற்கொள்ளும் வீண் செலவுகள் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் 6.5 லட்சம் கோடி (சுமார் ரூ.135 லட்சம் கோடி) இழப்பை அவா்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்று கூறிய டிரம்ப், துறையை நிர்வகிக்க எலான் மஸ்க்கையும் விவேக் ராமசாமியையும் நியமித்தார்.

இந்த நிலையில், ``ஒரு நபரின் வேலையை செய்ய 2 பேர் நியமிக்கப்பட்டிருப்பது என்பது எவ்வளவு திறமையானது’’ என்று அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரென் கேள்வி விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க் ``உங்களைப் போன்று, எங்களுக்கு ஊதியம் கிடையாது; அப்படியெனில், இது உண்மையில் மிகவும் திறமையானதுதான். இந்தத் துறை அமெரிக்க மக்களுக்காக பெரிய நன்மைகளைச் செய்யும். இனிவரும் வரலாறு, நீதிபதியாக இருந்து பதில் சொல்லும்’’ என்று கூறினார்.

இதையும் படிக்க:தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!

‘பருவநிலை மாநாடுகளால் இனி பலனொன்றுமில்லை!’

‘பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை’ என்று நிபுணா்களும், முக்கிய தலைவா்களும் எச்சரித்துள்ளனா். இது குறித்து, ஐ.நா. முன்னாள் பொத... மேலும் பார்க்க

அமெரிக்கா: சுகாதார அமைச்சா் நியமனத்துக்கு எதிா்ப்பு

அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத் துறை அமைச்சராக, முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடியின் உறவினா் ராபா்ட் எஃப். கென்னடியை (ஜூனியா்) டொனால்ட் டிரம் நியமித்துள்ளதற்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. கடந்த 5-ஆ... மேலும் பார்க்க

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: பப்புவா நியூ கினியாவின் கோகோபோ நகருக்கு 123.2 கி.மீ. தொலைவில் வெள்ளிக... மேலும் பார்க்க

ஜப்பான் இளவரசி யூரிகோ காலமானார்!

ஜப்பானின் ஏகாதிபத்திய குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101-வது வயதில் காலமானார்.பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்த... மேலும் பார்க்க

தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!

அமெரிக்காவில் ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்ட மாணவரை இறந்து விடுமாறு, ஏஐ பதிலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் ... மேலும் பார்க்க

மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் இரங்கல்

ஸ்பெயின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஸ்பெயினில் சரகோஸாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) அதிகாலையி... மேலும் பார்க்க