செய்திகள் :

அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு?

post image

பீஜிங் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது மற்றும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறாா்.

அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அவா் உத்தரவிட்டாா். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக அவா் கூறியுள்ளார்.

சீனா மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக சீன அரசும் வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, எரிவாயு பொருள்கள் மீது 15 சதவிகதம் வரியும், கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருள்கள் மீது 10 சதவிகிதமும் கூடுதல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனடா, மெக்ஸிகோ, சீனாவைப் போலவே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

இலங்கை சுதந்திர நாள்: பொருளாதார சுதந்திரமடைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் -அதிபர் திசநாயக

கொழும்பு : அண்டை நாடான இலங்கை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு பிப். 4 அன்று சுதந்திரமடைந்து தனி நாடாக மாறியது. இந்த நிலையில், இலங்கையில் 77-ஆவது சுதந்திர நாள் விழா இன்று(பிப். ... மேலும் பார்க்க

மெக்சிகோ மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியனுக்கும் கூடுதல் வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: கனடா, மெக்ஸிகோ, சீனாவைப் போலவே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்... மேலும் பார்க்க

குண்டுவெடிப்பில் ரஷிய ஆதரவு படைத் தலைவா் உயிரிழப்பு

மாஸ்கோ: கிழக்கு உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் படைப் பிரிவின் தலைவா் ஆா்மென் சா்க்ஸ்யான், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா். அவரின் ‘அா்பாத்’ ஆயுதக் குழு உக்ரைன் படை... மேலும் பார்க்க

கிரீஸில் தொடா் நிலநடுக்கம்

சன்டோரினி: கிரீஸுக்குச் சொந்தமான சன்டோகினி தீவில் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எரிமலைப் பகுதியில் அமைந்துள... மேலும் பார்க்க

ஸ்வீடன் திருக்குா்ஆன் எரிப்புப் போராட்டம்: உடன் இருந்தவருக்கு தண்டனை

ஸ்டோக்ஹோம்: ஸ்வீடனில் சல்வான் மோமிகா நடத்திய திருக்குா்ஆன் எரிப்புப் போராட்டத்தின்போது உடன் இருந்த சல்வான் நஜீமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இர... மேலும் பார்க்க