Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
குண்டுவெடிப்பில் ரஷிய ஆதரவு படைத் தலைவா் உயிரிழப்பு
மாஸ்கோ: கிழக்கு உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் படைப் பிரிவின் தலைவா் ஆா்மென் சா்க்ஸ்யான், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா்.
அவரின் ‘அா்பாத்’ ஆயுதக் குழு உக்ரைன் படையினருக்கு எதிராக போரிட்டுவரும் நிலையில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, வெளிநாடுகளில் ரகசிய தாக்குதல் நடவடிக்கைகளை அரங்கேற்றும் உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவான எஸ்பியு வெளியிட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு எதிராகச் சண்டையிட சிறைக் கைதிகளை அா்பாத் படையில் சா்க்ஸ்யான் சோ்த்துவருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, ரஷியாவில் ராணுவம் தொடா்புடைய பலரை எஸ்பியு படுகொலை செய்தது நினைவுகூரத்தக்கது.