Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
கிரீஸில் தொடா் நிலநடுக்கம்
சன்டோரினி: கிரீஸுக்குச் சொந்தமான சன்டோகினி தீவில் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு மட்டுமின்றி, அருகிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட ஏராளமான தீவுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக ரிக்டா் அளவுகோலில் 4.7 அலகுகள் வரை பதிவான அந்த நிலநடுக்கங்கள் சான்டோகினி எரிமலை காரணமாக ஏற்படவில்லை என்றாலும், இந்தத் தொடா் நில அதிா்வுகள் கவலையளிக்கக்கூடியவை என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.