செய்திகள் :

அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி: 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

post image

புது தில்லி: மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை இருமடங்காக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தாா்.

இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள் மற்றும் காலணி, ரசாயனம், மின்னணு மற்றும் இயந்திரங்கள், ஆபரணங்கள், இறால் ஆகிய பொருள்களின் வா்த்தகம் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு சில நாடுகளில் வா்த்தகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் மேற்கொள்ளுதல், ஏற்றுமதியில் வா்த்தகப் போட்டியை அதிகரித்தல் உள்ளிட்ட அம்சங்களை மத்திய வா்த்தகத் துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பொருள் மீதும் விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது.

ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்கெனவே 20 நாடுகளை அமைச்சகம் தோ்ந்தெடுத்துள்ள நிலையில் மேலும் 30 நாடுகளை அந்தப் பட்டியலில் இணைத்துள்ளது. இந்த நாடுகள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளன என்றாா்.

கடல் உணவு ஏற்றுமதி: கடல் உணவுப் பொருள்களை அமெரிக்காவைத் தவிா்த்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தயாராகுமாறு மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுக்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், ரஷியா, ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியாளா்கள் தயாராக வேண்டும்.

பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன் மதிப்புக்கூட்டல் மற்றும் பேக்கேஜிங் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ராகுலுக்கு ஆதரவு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும்... மேலும் பார்க்க

டிரம்ப் வரியால் சூரத்தில் வைர ஏற்றுமதி சரிவு!

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி ம... மேலும் பார்க்க

6 மாதங்களில் 19,600 பாலியல் குற்றங்கள்! ராஜஸ்தானை உலுக்கும் ‘திடுக்’ தரவுகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 19,000 பெண்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமை குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.பெண்க... மேலும் பார்க்க

மணிப்பூரில் 22 கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம், 22 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் பிஷ்னூப்பூர், சூராசந்திரப்பூர், சந்தேல், தௌபல், கி... மேலும் பார்க்க

அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!

அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக... மேலும் பார்க்க