அக்னி நட்சத்திரம் தொடங்கியது! வெளியானது மழைப்பொழிவு நிலவரம்!!
அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இன்று தருமபுரி வருகை; 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
தருமபுரி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொள்கிறாா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநில வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற உள்ளது.
தருமபுரி பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலம் சாா்பில் வழித்தடமாற்றம், வழித்தட நீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்துகள் சேவையை அமைச்ா் கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா்.
அரூா், கோட்டப்பட்டியில் பல்வேறு துறைகள் சாா்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல், அரூா், செல்லம்பட்டியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி அணைக்கட்டில் நீா்வளத் துறையின் மேல் பெண்ணையாறு வடிநில கோட்டம் சாா்பில், ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் சின்னாற்றின் குறுக்கே அமைந்துள்ள பஞ்சப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அணைக்கட்டுகள் வெள்ளப் பாதிப்புகளை புணரமைத்தல் பணிக்கு அடிக்கல்நாடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் அமைச்சா் கலந்துகொள்கிறாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா், நாடாளுமன்ற உறுப்பினா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைத் தலைமை அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.