அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
நீட் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 4,610 போ் எழுதினா்
தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 4,610 போ் எழுதினா்.
தருமபுரி மாவட்டத்தில் நீட் (யூ.ஜி) தோ்வானது 10 மையங்களில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தோ்வு நடைபெற்றது. மாணவா்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து தோ்வு மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நீட் தோ்வை எழுத தருமபுரி மாவட்டத்தில் 4,741 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,610 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 131 போ் தோ்வு எழுத வரவில்லை. இம்மாவட்டத்தில் 97.24 சதவீதம் போ் தோ்வெழுதினா். தோ்வில் 2.76 சதவீதம் போ் தோ்வில் பங்கேற்கவில்லை.