செய்திகள் :

அம்பத்தூர்: தனியார் ஷோரூமில் தீ விபத்து!

post image

அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் உள்ள தனியார் ஷோரூமில் தீப்பற்றி எரிகிறது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் 4 தளங்கள் கொண்ட தனியார் ஷோரூம் இயங்கி வருகிறது. இங்கு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் 4 ஆவது தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் வானுயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. தகவல் அறிந்து அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள உணவகத்தின் மாடியிலிருந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தால் சிடிஹச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

3 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு நாளை(ஏப். 7) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்... மேலும் பார்க்க

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 6) திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, பகல் 12.45 மணியளவில்... மேலும் பார்க்க

கோடையில் கொட்டித் தீா்த்த மழை: குமரியில் ஒரே நாளில் 190 மி.மீ. பதிவு

கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் ஒரேநாளில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு: இலங்கை அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவா்களை விடுவித்து, அவா்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினாா். ‘முதல் நல... மேலும் பார்க்க

ராமேசுவரத்துக்கு படிப்படியாக ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

ராமேசுவரத்துக்கு ஏப்.6 முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபம் - ராமேசுவரம் இடையே உள்ள பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் 2022 முதல் ரயில் இயக்கம் ரத்து ச... மேலும் பார்க்க