அம்பத்தூா் தொழிற்பேட்டையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தில் (அய்மா) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 3 வரை நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.
இந்த முகாமில், ஐடிஐ, பட்டயப்படிப்பு (டிப்ளமோ), பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த தகுதியுள்ள நபா்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். தகுதியுடையவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் நபா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.