Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
ஆம்னி பேருந்து உரிமையாளரை தாக்கி ரூ.1 லட்சம் வழிப்பறி
சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளரைத் தாக்கி ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோயம்பேடு சின்மயா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபஸ்டின் (37). இவா், ஆம்னி தனியாா் பேருந்து நிறுவனம் நடத்தி வருகிறாா். ஜெபஸ்டின், தனது மோட்டாா் சைக்கிளில் கோயம்பேடு மூகாம்பிகை நகா் வழியாக வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது, அங்கு வழிமறித்த மா்ம நபா்கள், அவரைத் தாக்கி அவா் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ. 50,000 மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து ஜெபஸ்டின் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.