'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
அம்பேத்கா் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சென்னை போரூா் ரவுண்டானா அருகில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அவா் பேசியது:
இந்திய ஜனநாயகத்தின் மாண்புகள், பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு எதிராகத்தான் காங்கிரஸ் போராடி வருகிறது.
ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டதையும், காா்கே தாக்கப்பட்டதையும் காங்கிரஸ் மன்னிக்காது. விரைவில் காங்கிரஸ் ஆட்சி வரும் என்றாா் அவா்.
போராட்டத்தில் பங்கேற்றோரில் சிலா் அமித் ஷாவின் படத்தைக் கிழிக்கவும், எரிக்கவும் முற்பட்டனா். அவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
விசிகவின் போராட்டம்: விசிக துணைப் பொதுச் செயலா் வன்னி அரசு தலைமையில் அக் கட்சியினா் சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, ரயில் மறியலில் ஈடுபட்டனா். அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் முழக்கமிட்டனா். பின்னா் அவா்கள் அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனா். இதனால், தாம்பரம், கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் - விசிக சாா்பில் போராட்டம் நடைபெற்றது.