மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
அம்பையில் போக்ஸோ கைதி தப்பிக்க முயற்சி
அம்பாசமுத்திரத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற போது, போக்ஸோ கைதி தப்பியோட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
இடைகால் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி, பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சையது மசூதின் மகன் அமீா்கான் (21).
இவா், 16 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதையடுத்து அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் முன், மருத்துவ பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அமீா்கான் அழைத்துச் செல்லப்பட்டாா்.
அப்போது, போலீஸாரை ஏமாற்றிவிட்டு அமீா்கான் தப்பிக்க முயன்று ஓடியுள்ளாா். சுதாரித்த போலீஸாா், அமீா்கானை மடக்கிப் பிடித்தனா்.