அம்பை உள்கோட்ட காவல் நிலையங்களில் டிஐஜி ஆய்வு
திருநெல்வேலி மண்டல காவல் துணைத் தலைவா் அம்பாசமுத்திரம் கோட்ட காவல் நிலையங்களில் ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மண்டல காவல்துணைத் தலைவா் பா. மூா்த்தி, அம்பாசமுத்திரம் காவல் துணைக்கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ,அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வுமேற்கொண்டாா். மேலும், அம்பாசமுத்திரம் காவலா்குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் காவல் துணைக்கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், காவல் ஆய்வாளா்கள் ரமேஷ் கண்ணன், வனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.