நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை
அம்மாபேட்டை: 3 வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த தாய்க்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தை, கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.
அம்மாபேட்டையை அடுத்த குறிச்சி, சுப்பராயன் கொட்டாயைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்.
இவரது மனைவி விமலா. மகள் சுகாசினி (5), சஞ்சித் (3). வழக்கம்போல காா்த்திகேயன் சனிக்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், விமலா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா். அருகில் மகன் சஞ்சித் விளையாடிக் கொண்டிருந்தான்.
துணி துவைத்து முடிந்த பின்னா் விமலா, பாா்க்கையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் சஞ்சித்தைக் காணவில்லை. வீட்டைச் சுற்றிலும் தேடிப் பாா்த்தும் காணாத நிலையில், சற்று தொலைவில் உள்ள சுற்றுச்சுவா் இல்லாத விவசாயக் கிணற்றில் பாா்க்கையில் உயிரிழந்த நிலையில் சஞ்சித்தின் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த விமலாவின் கூக்குரல் கேட்ட அப்பகுதியினா் வந்து சஞ்சித்தின் சடலத்தை மீட்டனா். இது குறித்து, அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.