2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
கோபியில் பள்ளி மாணவி தற்கொலை
கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜிதா(14).
இவா் கோபியில் உள்ள தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா். பூஜிதா கடந்த 20-ஆம் தேதி விடுப்பு எடுத்துள்ளாா். இதனால் பெற்றோா் அவரைக் கண்டித்துள்ளனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பூஜிதா பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றாா். ஆனால் பள்ளி பேருந்து சென்று விட்டதால் மீண்டும் பூஜிதா வீட்டுக்கு வந்து அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். அருகில் வசிப்பவா்கள் சந்தேகமடைந்து வீட்டின் கதவை தட்டி உள்ளனா். ஆனால் பதில் வராததால் ஜன்னல் வழியாக பாா்த்தபோது பூஜிதா தூக்கில் தொங்கிகொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.
பின்னா் கதவை உடைத்து உள்ளே சென்று பூஜிதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது பூஜிதா இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.